புதுச்சேரியில் அரசு விழாவில் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்ற சட்டமன்ற உறுப்பினர் நேரு முதல்வர் முன்னிலையில், தலைமைச் செயலாளருக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததால் பரபரப்பு.
புதுச்சேரி அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜு வர்மா, சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி, உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாமல் சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று சுற்றுச்சூழல் சம்பந்தமாக நடைபெற்ற பல்வேறு கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சான்றிதழையும், விருதுகளையும் வழங்கினார். அப்பொழுது விழா நடைபெறும் இடமான கம்பன் கலையரங்கிற்கு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு சுவர் ஏறி குதித்து தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வந்தார்.
திருமண நிகழ்வில் பாயாசம் சரியில்லாததால் மணமகன், மணமகள் வீட்டார் இடையே பயங்கர மோதல்
விழா மேடையில் இருந்த தலைமை செயலரை பார்த்து புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னானது. நகரப்புறங்கள் குப்பை கூலானாக கிடக்கிறது. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதுவரை திட்டத்தில் என்ன பணிகள் செய்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும் புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் தலைமை செயலர் இந்த ஊரில் இருக்கக் கூடாது. உடனடியாக அவர் வெளியேற வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரை எதிர்த்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, சி.எம் இருக்கிறார் என்ற மரியாதைக்காக வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்துகளில் சில்லறை பிரச்சினைக்கு முதல் முறையாக QR கோடு மூலம் தீர்வு கண்ட கோவை நடத்துநர்கள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமை செயலரை பார்த்து நேருக்கு நேராக கேள்விகளை எழுப்பும் போது விழா மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆகியோர் அமைதியாக அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.