காரைக்கால் அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஷிணி காரைக்கலில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் வேலை காரணமாக காலைக்காலில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் நெப்பொலியன் தனது காரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு லாரி ஒன்று சென்றுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நிரவி அருகே வந்துகொண்டிருந்த காரும், லாரியும் எதிர் எதிரே மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிக்கொண்ட பேராசிரியர் நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல்லில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை குளத்தி வீச்சு; காவல்துறை விசாரணை
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெப்போலியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.