திருமண தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் சேர்த்து கொடுத்த கல்யாண வீட்டார்

By Velmurugan s  |  First Published Jun 1, 2023, 6:31 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்தினர்களுக்கு தாம்பூலப் பையில் மதுபாட்டில் வைத்து விநியோகிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


புதுச்சேரியில் கடந்த 28-ம் தேதி  சென்னையைச் சேர்ந்த நிர்மல் என்பவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை  சேர்ந்த ஆரதி என்ற மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Latest Videos

இந்த நிலையில் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமண வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றுடன் மதுபான பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

ஆனால் மதுபாட்டிலுடன் வழங்கப்பட்ட தாம்பூல பையை சிலபேர் 2, 3 என்று கேட்டுக் வாங்கி சென்றனர். ஒருசிலர் மது பாட்டில் வேண்டாம். வெறும் தாம்பூல பையை மட்டும் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட பலருமே இதை பெற்றுச் சென்றனர்.

கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்

திருமணத்திற்கு வந்தவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர்.

click me!