புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூல பையுடன் மதுபாட்டிலை சேர்த்து வழங்கிய நபருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகுமார் புதுவை மாநில நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் கார்த்தி பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்கள் புதியவெளியாகும் போது பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கி வருகிறார்.
புதுச்சேரியில் கடந்த 28ம் தேதி இவருடைய அக்கா மகளுக்கு நகர பகுதியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூல பை கொடுக்கும் போது அதோட சேர்த்து குவாட்டர் பாட்டில் சரக்கு கொடுத்து புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி? திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்
மேலும் இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகி புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்த புதுச்சேரி கலால்துறை அதிகாரிகள் பொது இடத்தில் அளவுக்கு அதிகமாக மதுபாட்டில் வைத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், திருமண மண்டப உரிமையாளர் மற்றும் மொத்தமாக மதுபானம் கொடுத்த மது கடை விற்பனையாளர், இதனை திருமண மண்டபத்தில் விநியோகம் செய்த நடிகர் கார்த்திக் மன்ற தலைவர் ராஜகுமாரன், ஆகிய மூன்று பேருக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மதுரை மாநகராட்சியில் ஆய்வு செய்த உருவபொம்மைகள்; பெண் கவுன்சிலரின் விநோத எதிர்ப்பு
தான் பிரபலமடைய வேண்டும் என்று கருதி பெண்ணின் தாய் மாமன் செய்த இந்த செயல் அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது. மேலும் ராஜகுமார் புதுச்சேரி மாநில நடிகர் கார்த்தி தலைமை ரசிகர் மன்ற மாநில தலைவராக இருந்து வருவதால் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.