புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மூதாட்டியுடன் விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தைச் சேர்ந்தவர் பேட்ரிசியா போல்ட்ஸ் (வயது 64). இவர் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க குடியுரிமை உள்ள அவர் இந்தியாவின் பல மாநிலங்களை சுற்றி பார்த்து பின்னர் புதுச்சேரியில் தனது சுற்றுலாவை தொடர்ந்துள்ளார். அப்போது புதுச்சேரி புஸ்ஸி வீதியில் பெண்களுக்கான அழகு சாதனக்கடை நடத்தி வரும் வட இந்திய இளைஞர் (வயது 36) மேக்ராஜ் பட்வுடன் பழக்கம் ஏற்பட்டது.
தென்னிந்திய அழகி போட்டி; 2 குழந்தைகளின் தாயான கோவை பெண் பட்டம் வென்று அசத்தல்
இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இச்சூழலில் தமிழகம் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் பேட்ரிசியா போல்ட்ஸ் சென்றுள்ளார். அவர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு தனது நண்பர் மேக்ராஜ் பட்டை அழைத்து இருவரும் விருப்பப்பட்டு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். உறவின்போது தனக்கு வலி ஏற்பட்டதாக அமெரிக்க மூதாட்டி குறிப்பிட்டு நிறுத்தக் கூறியுள்ளார்.
அதனை கண்டுகொள்ளாத மேக்ராஜ் பட் தொடர்ந்து வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டு தனது ஆசை தீர்ந்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு மற்றும் உடல் வலியால் அவதியடைந்த அமெரிக்க மூதாட்டி மேக்ராஜ் பட்டை தொடர்பு கொண்டு மருத்துவரிடம் அழைத்து செல்ல கூறியுள்ளார்.
குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்; 9 நாட்களாக அதே நீரை குடித்த மக்கள்
அதற்கு அவர் மறுத்து விட்டதால் தாமாகவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விருப்பப்பட்டு உடலுறவில் ஈடுபட்டாலும், நிறுத்தக்கூறியபோது வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டதால் மேக்ராஜ் பட் மீது பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த மேக்ராஜ் பட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.