புதுச்சேரியில் G20 மாநாடு எதற்கு? G20 மாநாடு நடத்துவது இந்தியாவா? பாஜகவா? என்ற தலைப்புடன் புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜி-20 தொடக்க நிலை முதல் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வருகை புரிந்து உள்ளதால் பல்வேறு ஆக்கிரமிப்புகள், கடைகள், பிச்சைக்காரர்கள், மற்றும் தனியார்கள் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.
பெரம்பலூரில் வயதான தம்பதி நகைக்காக படுகொலை; காவல்துறை விசாரணை
இந்த நிலையில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்,அலைகள் இயக்கம் மற்றும் பிரெஞ்சிந்திய மக்கள் முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஜி 20 மாநாடு எதற்கு? இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறதா? பா.ஜ.க. நடத்துகிறதா? என்ற கேள்வி எழுப்பி தலைப்பிடப்பட்ட போஸ்டர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் அந்த போஸ்டரில் புதுச்சேரியில் ஆலைகள் மூடல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, ரேஷன் கடைகள் மூடல், அரசு சார்பு நிறுவனங்கள் மூடும் அபாயம். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி அவலம். மின்துறை தனியார் வசம், பிரிப்பேயிடு பில் அபாயம். வனத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சியால் ஏராளமான மரங்கள் அழிப்பு. ஆறு. குளங்கள் வீடுகள் அபகரிப்பு. நெகிழி, கேரிபேக் தடை என்ன ஆனது? டிஜிட்டல் பேணர்கள் தடை உத்தரவு செயல்படுத்தப்படாமல் சந்தி சிரிக்கிறது!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு
G.20 மாநாடு இந்தியா நடத்துகிறதா? பா.ஜ.க. நடத்துகிறதா? என்ற வாசகங்களுடன் புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே துணை நிலை ஆளுநர் தமிழிசையை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது G 20 மாநாட்டை விமர்சித்தும் புதுச்சேரியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பாகி உள்ளது.