ஜி20 மாநாடு புதுவையில் பிச்சைகாரர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published Jan 30, 2023, 2:58 PM IST

ஜி 20 மாநாடையொட்டி சாலையில் சுற்றி திரிந்த பிச்சைக்காரர்களை அதிகாரிகள் பிடித்து சென்று காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநாடு இன்று தொடங்கியது. ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் 75 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Latest Videos

மாநாட்டையொட்டி புதுச்சேரியின் பிரதான சாலைகளை புதுப்பித்தும், டிவைர்களில் வர்ணம் பூசியும், பூச்செடிகள் நட்டு அழகுப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சாலைகளில் சுற்றித் திரிந்த பிச்சைக்காரர்களை சமூக நலத்துறையினர், நேற்று காவல் துறை உதவியுடன், பிடித்து நகராட்சி காப்பகங்களில் தங்க வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அங்கு அவர்களுக்கு வரும் 31ம் தேதிவரை உணவு வழங்கவும், மருத்துவ உதவி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் காப்பகம் செல்ல மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையோரம் படுத்திருந்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் பிச்சை எடுத்தவர்கள் என அனைவரையும் நகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று மாநாட்டை முன்னிட்டு நகரில் அமைந்துள்ள குடிசைகளை மறைக்கும் வகையில் குடிசை வீடுகளின் முன்பாக பிரமாண்ட பேனர்களை அமைத்து குடிசைகளை மறைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

click me!