புதுவையில் ஊழியர்களின் போராட்டத்தால் மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை; மது பிரியர்கள் வருத்தம்

By Velmurugan s  |  First Published Aug 23, 2023, 1:57 PM IST

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக மதுபான உற்பத்தி ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுபானத்தை விநியோகம் செய்யும் பணி தடைபட்டு மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரி ஆரியப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சாராய ஆலை உள்ளது. இங்கு கடந்த 2009ம் ஆண்டு தற்காலிக ஊழியர்களாக பணி செய்து வந்த 53 நபர்களை, கடந்த 2015ம் ஆண்டு நிர்வாகம் பணி நிரந்தரம் செய்து ஆணை பிறப்பித்தது. இதனை அடுத்து இங்கு கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 53 ஊழியர்களை முறைகேடாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மூன்றாம் நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து  நீதிமன்றம் ஊழியர்கள் எவ்வாறு பணி அமர்த்தப்பட்டார்கள் என்பது குறித்து ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், ஆலை நிர்வாகம் சரியாக பதில் தராத காரணத்தினாலும், சரியான ஆவணங்களை ஒப்படைக்காத நிலையிலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆலை நிர்வாகம் 53 பல்நோக்கு ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது. 

Tap to resize

Latest Videos

undefined

சொகுசு பங்களாவில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை; சிசிடிவியில் பதிவான காட்சிகளால் பரபரப்பு

இதனை அடுத்து ஊழியர்கள் தரப்பில் 12 வார அவகாசம் கேட்டிருந்த நிலையில், ஆலை நிர்வாகமானது நேற்று உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 53 பல்நோக்கு ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆலையை முற்றுகையிட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் ஆலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கணவன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி அவனையே போட்டுத் தள்ளிய மனைவி; திண்டுக்கல்லில் பரபரப்பு

சாராயலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் லிட்டர் சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் சாராயம் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

click me!