புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு வாடகை பணத்தை செலுத்தாததால் தலைமைச் செயலக பொருட்களை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் 2019ல் பாராளுமன்ற தேர்தலின்போது 140 வாகனங்களை 2 டிராவல்ஸ் நிறுவனங்களிடம் தேர்தல் துறை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது. தேர்தலுக்கு பின் வாடகை தொகையாக ரூ.1 கோடியே 22 லட்சம் கேட்டு ரசீது வழங்கப்பட்டது. தேர்தல் துறை ரூ.77 லட்சம் மட்டும் வழங்கியது. மீதி தொகையை வழங்கவில்லை.
இதனால் டிராவல்ஸ் நிறுவனங்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. விசாரணையின் போது அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. பாக்கி தொகைக்காக தலைமை செயலகம், ஆட்சியர் அலுவலகம், தேர்தல் துறை அலுவலக அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற அமீனாக்கள் குணசேகரன், செல்வராஜ் ஆகியோர் தலைமை செயலகம் வந்தனர்.
undefined
குன்னூர் அருகே கிராம மக்களை 2 மாதங்களாக தூங்கவிடாமல் செய்த கரடி பிடிபட்டது; மக்கள் நிம்மதி
தலா 300 கணினிகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் 5 கார்களை ஜப்தி செய்ய உத்தரவு உள்ள தகவலை தலைமை செயலக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சட்டத்துறை செயலருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நீதிமன்றத்தில் கால அவகாசம் கோர முடிவு செய்தனர். இதனால் தலைமை செயலகத்தில் பரபரப்பு நிலவியது.