சுடுகாட்டில் வைக்கப்படும் பிணங்களுக்குக் கூட பாதுகாப்பில்லை; கடல் அறிப்பால் குமுறும் கிரமாங்கள்

By Velmurugan s  |  First Published Aug 21, 2023, 8:25 PM IST

புதுச்சேரியில் கடல் அரிப்பால் எப்பொழுது வேண்டுமானாலும் வீடுகள் சேதமடையலாம் என்ற அச்சத்தில் உள்ளதால் அரசின் உதவியை எதிர்நோக்கி கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.


புதுச்சேரி பெரியகாலப்பட்டு, சின்ன காலப்பட்டு, கணகசெட்டிகுளம், பிள்ளை சாவடி ஆகிய 4 மீனவ கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் துன்பத்திற்கும், துயரத்துக்கும் ஆளாகி வருகின்றனர். மேலும் கடல் நீரும் ஊருக்குள் புகுந்து வருகிறது. மீனவ கிராமமான பிள்ளை சாவடியில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் இருந்த கடற்கரை மெல்ல மெல்ல 500 அடிக்கு மேல் ஊரை நோக்கி கடல் நீர் வந்த வண்ணமே இருக்கிறது.

 இதனை தடுப்பதற்கு கடலோரப் பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை புதுச்சேரி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் பிள்ளை சாவடி பகுதியை ஒட்டி உள்ள தமிழகப் பகுதியான பொம்மையார்பாளையத்தில் தமிழக அரசு தூண்டில் முள் வளைவு அமைத்துள்ளதால் புதுச்சேரி பகுதியில் கடல் அரிப்பு மேலும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Latest Videos

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் வீணாக்கப்பட்ட உணவு; குவியல் குவியலாக கீழே கொட்டி அழிப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடல் அரிப்பினால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், கோவில்கள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 9 கோடி ரூபாய் அளவில் மீன் வலை காப்பகம் மற்றும் வலை பின்னும் இடம் ஆகியவை நேற்று முன்தினம் கடுமையான கடல் சீற்றத்தினால் கடலில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

குவாட்டரை பங்கிடுவதில் தகராறு 60 வயது முதியவரை கொலை செய்த 18 வயது கிளாஸ்மேட்

அது மட்டுமல்லாமல் பிள்ளை சாவடி பகுதியில் உள்ள சுடுகாட்டிலும் கடல் நீர் புகுந்துள்ளதால் சுடுகாட்டில் உள்ள பிணங்கள் ஒவ்வொன்றாக கடலில் அடித்துச் செல்லப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் தினமும் எப்போது ஊருக்குள் தண்ணி புகும் என்ற திக் திக் பயத்தில் மீனவர்கள் தினந்தோறும் பரிதவித்து வருவதாகவும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குடியுரிமையை புதுச்சேரி அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

click me!