சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இளம் பெண்கள் பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை கிரங்கடித்தனர்.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் அழகிகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி பாண்டி மெரினாவில் நடைபெற்றது இதில் பங்குபெற்ற குழந்தைகள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர், வீரபாண்டி கட்டபொம்மன், முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அன்னை தெரசா, டாக்டர் அப்துல் கலாம், வீரமங்கை வேலுநாச்சியார், ஏஞ்சல் உட்பட பல்வேறு வேடமணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
மேலும் தலைவர்கள் போல் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டும் இன்றி ஸ்டேட் ஆப் இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவின் பல்வேறு மாநில கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அந்த மாநிலத்திற்கு உரித்தான பிரசித்தி பெற்ற ஆடைகளை அணிந்து அந்த மாநிலத்தின் கலாசாரத்தை பின்பற்றும் வகையில் மேக்கப் செய்து கொண்டு அழகிய அசைவுகளோடு நடந்து வந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெனிபர் மேக் ஓவர் ஆர்டிஸ்ட் செய்திருந்தார்.