ராகுல் காந்தி வாழ்க, சோனியா காந்தி வாழ்க என்ற முழக்கத்துடன் காதலியை கரம் பிடித்த தொண்டர்

By Velmurugan s  |  First Published Aug 15, 2023, 4:55 PM IST

புதுவையில், ராகுல் காந்தி வாழ்க, சோனியா காந்தி வாழ்க, காங்கிரஸ் வாழ்க, என்ற மந்திரங்களுடன் காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்.


விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பட்டதாரியான இவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதே போன்று திருபுவனை ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசி. பட்டதாரியான இவர் திருபுவனை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் பொழுது அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த பிரகாஷ் என்பருடன் காதல் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்து 13 ஆண்டுகள் காதலித்து வந்தனர். உயிர்க்கு உயிராக காதலித்து வந்த அன்பரசியை தனது சொந்த செலவில் பிரகாஷ் படிக்க வைத்துள்ளார். மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தொடர்ந்து 13 ஆண்டு காலம் காதலித்து வந்தனர். மேலும் இருவருமே தங்களது திருமணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்பு நடத்த வேண்டும் என்று இருவரும் விருப்பப்பட்டனர்.

நல்ல கோபி மஞ்சூரியன், ஐஸ்கிரீமை மிஸ் பண்ணிட்டாங்க; தேநீர் விருந்தை புறக்கணித்தவர்களை கலாய்த்த ஆளுநர்

இதற்காக கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இவர்கள் இருவரும் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து சுதந்திர தினமான இன்று திருமணத்தை காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ முறையில் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து அதன்படி இன்று திருமணம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ராகுல் காந்தி வாழ்க, சோனியா காந்தி வாழ்க, காங்கிரஸ் வாழ்க, என்ற மந்திரங்கள் முழங்க காதல் ஜோடிகள் மாலைகளை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அண்னை சோனியா காந்தி வாழ்க என கோஷமிட்டபடி அனைவரும் அர்ச்சனைகளை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

தேசியக் கொடியிணை அரை கம்பத்தில் பறக்கவிட்ட அமைச்சர்; பொதுமக்கள் அதிர்ச்சி 

இதுகுறித்து மணமக்கள் கூறும்போது, கடந்த 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம் இளம் தலைவர் ராகுல் காந்தி முன்புதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்களது ஆசை ஆனால் அது நிறைவேறவில்லை, சமத்துவ முறையில் திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து தற்போது காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவர்கள் மத்தியில் திருமணத்தை செய்து கொண்டுள்ளோம், எங்களது ஒரே குறிக்கோள் சாதி மதம் பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் சாதி என்பதை உடைத்தெறிய வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் அதனால் தான் மாற்று சாதியினராக இருந்தாலும் சமத்துவத்தை காக்கின்ற வகையில் இந்த திருமணத்தை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

click me!