நல்ல கோபி மஞ்சூரியன், ஐஸ்கிரீமை மிஸ் பண்ணிட்டாங்க; தேநீர் விருந்தை புறக்கணித்தவர்களை கலாய்த்த ஆளுநர்

By Velmurugan s  |  First Published Aug 15, 2023, 4:29 PM IST

புதுச்சேரியில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்காத நிலையில், அவர்கள் சில சுவையான உணவுகளை மிஸ் செய்து விட்டதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நக்கலாக பதில் அளித்துள்ளார்.


புதுச்சேரியில் நாட்டின் 77-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கடற்கரை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டது. இதில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்த முதலமைச்சர் ரங்கசாமி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீரி விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனி ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். விருந்துக்கு வந்தவர்களை வரவேற்று பேசி துணைநிலை ஆளுநர் தமிழிசை, கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் பங்கேற்க வேண்டும்.

ஆளுநர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்று திறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு வந்தால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தேசியக் கொடியிணை அரை கம்பத்தில் பறக்கவிட்ட அமைச்சர்; பொதுமக்கள் அதிர்ச்சி

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ஆளுநர் விருந்து மழை காரணமாக நடத்தப்படவில்லை. அங்கு அதிகமாக மழை பொழிகிறது. இங்கு நாம் அனைவரையும் சகோதரத்துடன் அழைத்து கொண்டாட வேண்டும் என்பது எனது ஆசை. காலகாலமாக சுதந்திர தினத்தில் விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம்.

மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன். சுண்டைக்காய் நல்லது, அனைவருக்கும் தேவை என பார்த்து பார்த்து செய்தேன். இதில் திமுகவினர் வர வில்லை என்பது பெருமைக்குரியது அல்ல. அரசியல், கொள்கைகளை தாண்டி நடைபெறும் வழிமுறை. இதில் வரவில்லை என்றால் எனக்கு எதுவும் குறையில்லை. வராதவர்களை பற்றி கவலை இல்லை வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம் என்றார்.

ஆழ்கடலுக்குள் தேசிய கொடிக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை; புதுவையில் அசத்தல்

நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழகத்தில் எது நடந்தாலும்  கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தில் தமிழிசை ஏன் மூக்கை நுழைக்கிறார் என திமுக அமைப்பாளர் சிவா கேட்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு ஆளுநரை பார்த்து தமிழகத்தை பற்றி எப்படி பேச முடியும் என கேட்கிறார்கள். தமிழக சட்டமற்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறும் போது எனக்கு தெரிந்த உண்மையை கூறினேன்.

தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு இங்கு எப்படி பதில் சொல்லலாம். அதற்கு நான் வர மாட்டேன் என திமுக சிவா கூறுவதால் எனக்கு நஷ்டமில்லை. நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டீர்கள். தொடர்ந்து தேநீர் விருந்தில் இருந்து கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்முகத்தோடு ஆளுநர் தமிழிசையே பரிமாறினார். துணைநிலை ஆளுநர் தமிழிசை அளித்த சுதந்திர தின விழா தேனீர் விருந்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!