புதுச்சேரியைச் சேர்ந்த 4 பெண்களுக்கு ஆபாச புகைப்பங்களை அனுப்பி தனிமையில் வீடியோ காலில் வரச்சொல்லி மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவையை சேர்ந்த 4 பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்துள்ளது. அதில் அவர்களின் முகத்தை மாற்றிவிட்டு அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல அந்த படம் இருந்தது. அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாணமாக வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் அந்த எண்ணை வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது 24) என்பதும், இவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணி புரிவதும் தெரிய வந்தது.
விசாரணைக்கு அழைத்த போலீசார்; அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி - காவல்நிலையம் முற்றுகை
இதனை அடுத்து அவரை கைது செய்த புதுச்சேரி போலீஸ் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர் திருமணமாகி மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் புதுச்சேரி பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.