புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர் ஒருவர் ஒரு மாத காலத்திற்கு மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்படுவதால் அவரது கடையில் கூட்டம் குவிந்து வருகிறது.
புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம் இவரது பிறந்த நாள் அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இவரது ஆதரவாளர்கள் இப்போதே பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜம்ஜம் அறக்கட்டளை சார்பில் இன்று முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை சுமார் ஒரு மாதத்திற்கு மலிவு விலையில் காய்கறி வழங்க முடிவு செய்து அதற்கான திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகளை வழங்கி திட்டங்களை துவக்கி வைத்தார். இதில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் அனைத்தும் ஒரு மாதம் வரை மலிவு விலையில் வழங்கப்பட உள்ளது.
நடை பயணத்தின் போது அண்ணாமலை உணவகத்தில் இளைப்பாறிய அண்ணாமலை
இந்த இந்த காய்கறிகளை வில்லியனூர் தொகுதி மட்டுமின்றி புதுச்சேரி முழுவதும் உள்ள யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்ஜம் காய்கறி கடையில் கூட்டம் காலை முதலே அலைமோதி வருகிறது. மேலும் மலிவு விலையில் காய்கறிகள் வழங்க டன் கணக்கில் காய்கறிகளும் இறக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு காய்கறி வழங்கும் பாஜக பிரமுகரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநரை அண்ணன்களை ஏவி விட்டு நையப்புடைத்த கல்லூரி மாணவி