குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு வந்ததற்கு மிகுந்த உழைப்பு தேவை என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்று நோய்களுக்கான அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பொதுமக்களுக்கு அர்ப்பனித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், பெண்களின் சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் குடியரசு தலைவரின் வருகை வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.
பட்டங்கள் ஆள்வதில் பெண்கள் முன் வந்துள்ள நிலையில் சட்டத்தை இயற்றுவதில் குடியரசு தலைவர் அமைந்தது நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியும் - வாகை சந்திரசேகர் பேச்சு
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல. ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு வந்ததற்கு மிகுந்த உழைப்பு உள்ளது. புலியை முறம் கொண்டு விரட்டிய வீரத்தை குடியரசு தலைவரிடம் பார்க்கின்றேன். சாதாரண குடிமகளும் குடியரசுத்தலைவராக முடியும் என்று திரௌபதி முர்மு நிரூபித்துக் காட்டி உள்ளார். ஒட்டுமொத்த பெண்களின் பெருமையாக திரௌபதி இருப்பதாகவும் தமிழிசை புகழ்ந்துள்ளார்.
வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல, திமுகவுக்கு தான் - அண்ணாமலை பேட்டி