
புதுச்சேரி வில்லியனூர் வி.மணவெளி தண்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பூவேந்திரன் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம். சி.ஏ. படித்து வந்தார்.
இந்த நிலையில் இரவு திருப்பதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வில்லியனூர் அரும்பாத்தபுரம் அருகே வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து பூவேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனடியாக வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாக்கைக்காக போராடும் யானை
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் துறையினர் பூவேந்திரனின் உடலை கைப்பற்றி கதிர்காமம் பகுதியில் உள்ள புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.