புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமியை ஜெயிலர் ரஜினிகாந்த் ஸ்டைலில் மார்பிங் செய்து பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர்கள் சூர்யா, அஜித், விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு கெட்டப்புகளில் பேனராக வைத்து அவரது ஆதரவாளர்கள் அழகு பார்ப்பார்கள்.
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரற்ற நிலையில் பிறந்த குழந்தைகள் - உறவினர்கள் கதறல்
அதன்படி இந்த ஆண்டும் ஜெயிலர் ரஜினி கெட்டப்புகளில் வைக்கப்பட்டுள்ள ரங்கசாமியின் பேனர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் முதலமைச்சர் ரங்கசாமி, மோடியுடன் இருப்பது போன்றும், சிவாஜி, காமராசர், ரஜினியுடன் இருப்பது போன்றும் பல்வேறு கெட்டபுகளில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த இளைஞர் மீது கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் பெண் வீட்டார் வெறிசெயல்
அது மட்டும் இல்லாமல் முதன்மையான சாலைகளில் பெரிய அளவில் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு அதில் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் குறித்தும் விலக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து வீதிகளிலும் அனைத்து சாலைகளிலும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விளம்பர தட்டிகளை வைத்துள்ளது திருவிழா கோலமாக புதுச்சேரி காட்சியளிக்கிறது.