டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞருடன் நிர்வாண உரையாடல்; இளம் பெண் கதறல் - போலீஸ் வலைவீச்சு

By Velmurugan s  |  First Published Aug 3, 2023, 11:17 AM IST

திருமணம் செய்துகொள்ள மறுக்கும் இளம் பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாகக் கூறி மிரட்டல் விடுத்த இளைஞருக்கு காவல் துறையினர் வலைவீச்சு.


புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர்  கிளப் ஹவுஸ் என்கிற டேட்டிங் செயலி மூலமாக சென்னையை சேர்ந்த திலிப் குமார் என்கிற வாலிபர் உடன் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் பேசத் தொடங்கியுள்ளார். சிறிது காலம் சென்ற பின் இருவரும் நெருங்கி பழகி காதலித்ததாகக் கூறப்படுகிறது. 

பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் தகவல்களை பரிமாறிக் கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இளம் பெண்ணிக்கும், திலீப் குமார்க்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பெண் நாம் காதலிக்க வேண்டாம்,  நண்பர்களாக பேசி கொள்ளலாம் என கூறியுள்ளார். 

Latest Videos

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை மனதில் வைத்து வழக்கு பதியுங்கள் - திமுகவுக்கு வேலுமணி எச்சரிக்கை

இதற்கு மறுப்பு தெரிவித்த திலீப் குமார் நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், கையை அறுத்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்ததால் பயந்து போன அப்பெண் திலீப் குமாரை தொடர்பு கொண்டு போது, அவர் நான் உன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் அல்லது உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றால் நீ நிர்வாணமாக வீடியோ காலில் வந்து பேசினால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தீலிப் கூறியுள்ளார். 

நொய்யல் ஆற்றங்கறையில் முறையான பராமரிப்பு இல்லாததால் திதி கொடுக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

இதனை நம்பிய இளம் பெண் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது அந்த தொலைபேசி அழைப்பை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து தீலிப் இளம் பெண்ணிற்கு அந்த வீடியோவை அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நிர்வாண வீடியோவை உனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீலிப் குமாரை தேடி வருகின்றனர்.

click me!