ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தீவிர நாய் பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள்

By Velmurugan s  |  First Published Aug 2, 2023, 7:13 PM IST

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு தெரிவோரம் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


புதுச்சேரியில் வருகின்ற 7-ம் தேதி மற்றும் 8-ம் தேதி இரண்டு நாள் அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரிக்கு வருகிறார். அப்பொழுது முருங்கப்பாக்கம் கைவினை கலைஞர்கள் கிராமம், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், மணக்குள விநாயகர் ஆலயம், படகு குளம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிடும் அவர் மக்களுக்கான அரசு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை புதுச்சேரி காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டும் சாலை ஓரம் உள்ள சில மரங்கள் வெட்டப்பட்டும் வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் நகராட்சி சார்பில் தெருவோரம் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணியும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக நகரம் மற்றும் நகரத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் சுற்றி திரியும் தெருவோர நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகரப் பகுதியில் இன்று நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்களை விலங்கு நல ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சுற்றிவளைத்து நாய்களை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், பிடித்த நாய்களை விடும்படியும் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே நாய் பிடித்த வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு வழங்கும் நிதியில் 1 ரூபாய் கூட வீணாக செலவழிக்கப்படவில்லை - சபாநாயகர் விளக்கம்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விலங்குகள் நல ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பிடித்த நாய்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து விலங்குகள் நல ஆர்வலர்களை புதுச்சேரி காவல் துறையினர் தரதரவென இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மதுரையில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்

நாய்களை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விளங்கு நல ஆர்வலர்களை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!