புதுவையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது; கடைகள் அடைப்பு

By Velmurugan s  |  First Published Jul 31, 2023, 1:44 PM IST

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டனர்.


புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதியதாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட இந்திய கூட்டணி கட்சியினர் நேரு வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட் கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பெரிய மார்க்கெட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பிய அவர்கள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். ஆளுநர் மாளிகை அருகே சென்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுப்பு கட்டை இல்லாமல் காவல் வாகனம் மற்றும் டெம்போ ட்ராவலர் கொண்டு வழிமறித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஸ்டெர்லைட்டை காட்டிலும் 100 மடங்கு பெரிய பிரச்சினை என்.எல்.சி. அன்புமணி எச்சரிக்கை

அப்போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட் கட்டும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் ஆளுநர் மாளிகை அருகே பெரும் பரபரப்பு நிலவியது.

170 ஆடுகள் வெட்டப்பட்டு ஆண்களுக்கு மட்டும் கம கம கறி விருந்து; நாமக்கல்லில் விநோத திருவிழா

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கூட்டணி கட்சியினர் மற்றும் வியாபாரிகள் என நூற்றுக்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!