எங்க பொழப்புல ஏன் கை வைக்குற... புதுச்சேரியில் ஓலா டாக்சி டிரைவருடன் ஆட்டோ டிரைவர்கள் மோதல்

By SG Balan  |  First Published Jul 29, 2023, 9:13 PM IST

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா டாக்சி டிரைவரை மிரட்டி அவரது கார் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ஓலா டாக்ஸி டிரைவரை புதுச்சேரி ஆட்டோ டிரைவர் மிரட்டி கார் கண்ணாடியை உடைப்பதாக கூறும் வீடியோ வெளியாகி புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் எங்கும் இல்லாத அளவிற்கு புதுச்சேரியில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடும் கடைகள் ஏராளமாக உள்ளது. இதற்கு புதுச்சேரியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இரு சக்கர வாடகை விடும் கடைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Latest Videos

இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கி வந்த ஓலா டாக்ஸிகள் தற்போது புதுச்சேரியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஏற்கனவே வாடகைவிடும் இரு சக்கர வாகனத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தற்போது ஓலா டாக்சியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் கூறி வருகின்றனர்.

கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!

இந்த நிலையில் இன்று ஓலாவில் சவாரி செல்ல புக் செய்த வாடிக்கையாளரை காரில் ஏற்ற விடாமல் புதுச்சேரி சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஓலா டிரைவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அப்போது அவர் கார் கண்ணாடியை உடைப்பதாகவும் இனிமேல் சவாரி வந்தால் ஏற்றக் கூடாது என்று பேசுகிறார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதயும் மீறி ஓலா டாக்ஸியை எடுத்துச் சென்ற டிரைவரை அங்கு கூடியிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வழிமறித்து அவரை கற்களால் தாக்கும் வீடியோவும் வெளியாகி தற்போது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

இது குறித்து ஓலா டாக்சி டிரைவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கியது! 7 சாட்டிலைட்களுன் நாளை விண்ணில் பாய்கிறது!

click me!