புதுச்சேரி வரும் குடியரசுத் தலைவர்.. ஊரை பொலிவாக காட்ட நடக்கும் சிறப்பான பணிகள் - மின்னும் ஜிகினா பேப்பர்!

By Ansgar R  |  First Published Aug 5, 2023, 9:56 PM IST

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி வரவிருக்கிறார். ஆகஸ்ட் 7 மற்றும் 8ம் தேதி அவர் அங்கு தங்கி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


இதற்காக புதுச்சேரி முழுவதும் உள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு, தடுப்பு கட்டைகளுக்கு புதிய வண்ணங்கள் அடிக்கப்பட்டு, புதுச்சேரியை பொலிவுறு நகரமாக காட்ட வேண்டும் என்பதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதுச்சேரி நகர பகுதி மற்றும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் அனைத்து இடங்களும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகைக்காக சுமார் 500க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகின்றது.

Latest Videos

undefined

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்கிறார் - அண்ணாமலை பேச்சு

இந்த நிலையில் புதுச்சேரிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு, புதுச்சேரியை அழகாக காட்ட வேண்டும் என்பதற்கு ஒதியஞ்சாலை பகுதியில் சாலை ஓரம் இருந்த மின்சார பெட்டிகளுக்கு மஞ்சள் கலரில் ஜிகினா பேப்பரை ஒட்டி அதிகாரிகள் அழகாக மறைத்துள்ளனர். இந்த கட்சியை, அப்பகுதியில், சாலையில் செல்பவர்கள் வியப்புடன் பார்க்க வருகின்றனர். 

அதேபோன்று முருங்கப்பாக்கம் செல்லும் குடியரசுத் தலைவர், புதுச்சேரியின் பிரதான கழிவுநீர் ஆறான உப்பனாற்று வாய்க்காலை பார்க்கக் கூடாது என்பதற்காக இரண்டு புறமும் துணிகளை கட்டி அதிகாரிகள் மறைத்து வருவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.

இதை வேடிக்கை பார்த்து செல்லும் பலர், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியும் வருகின்றனர். மேலும் ஜனாதிபதி பாலத்தை கடக்கும் பொழுது புதுச்சேரி அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக, ஒரு பக்கம் துணியும் மறுபக்கம் தடுப்பு கட்டைகள் அமைத்து அதில் ஓவியங்களும் தீட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரி அதிகாரிகளின் புத்திசாலித்தனமான இந்த செயல் தற்போது புதுச்சேரியில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்.. உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் சென்னையில் கைது - என்ன நடந்தது?

click me!