புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி அரை கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் கடற்கரை சாலையில் நடைபெற்ற நாட்டின் 77வது சுதந்திர தினவிழாவில் புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைப்பார் என்று புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது கொடி ஏற்றும் பொழுது முழுமையாக ஏற்றாமல் கொடி மீண்டும் கீழே இறங்கி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அமைச்சர் கொடியை ஏற்றியவுடன் மீண்டும் அதிகாரிகள் அதனை முழுமையாக ஏற்றி பறக்க விட வேண்டும். ஆனால் அவர்களும் அலட்சியமாக இருந்ததால் தேசியக்கொடி ஏற்றிய ஒரு சில நொடிகளில் மீண்டும் அரைக்கம்பத்தில் பறந்தது.
undefined
தாராபுரத்தில் தங்கதேர் வழிபாட்டுக்கு அனுமதி கோரி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு
இதனால் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திரதின விழாவை ஒட்டி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினர் ஒத்திகைகள் பார்த்தும் தேசிய கொடியை ஒழுங்காக சரிவர ஏற்றாமல் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களும் வைரலாகி பரவி வருகிறது.
ஆழ்கடலுக்குள் தேசிய கொடிக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை; புதுவையில் அசத்தல்
ஒரு வழியாக தேசிய கொடி ஏற்றி முடித்தவுடன் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளில் மரியாதையை சந்திர பிரியங்கா ஏற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.