அறையில் இருந்து வெளிவந்த துர்நாற்றம்; திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - புதுவையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 17, 2023, 6:41 PM IST

புதுச்சேரி அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கில் தொங்கியவாறு கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி சஞ்சீவி நகர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் கோபி. உடல்நிலை பாதிக்கப்பட்டு கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ளவதற்காக அவரது இளைய சகோதரர் ராஜ்குமார் மருத்துவமனையில்  தங்கியிருந்தார். இதனிடையே கடந்த 11ம் தேதி இரவு 9 மணிக்கு பின் ராஜ்குமாரை திடீரென காணவில்லை. 

அவரை மருத்துவமனை, உறவினர்களின் வீடுகளில் மற்றும் பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை வார்டு பிரிவு கழிவறையின் ஒரு அறையில் துர்நாற்றம் வீச மருத்துவமனை  ஊழியர்கள் திறந்து பார்த்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்து கொலை; மனைவி, மகன் வெறிச்செயல்

அப்போது ஆழுகிய நிலையில் தூக்கிட்டவாரு ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில் தூக்கில் தொங்கியது ராஜ்குமார் (32) எனவும் திருமணம் ஆகாத அவர் மதுவிற்கு அடிமையாகி மன அழுத்ததில் இருந்ததால்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வாகனங்கள் நிறுத்துவதில் தகராறு; பாட்டில்களை பந்தாடிய ஊழியர்கள் - ஸ்வீட் ஸ்டாலில் காரசாரம்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராஜ்குமாரின் உறவினர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஆண் ஒருவர் அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!