சபாநாயகருடன் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்; புதுவையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 22, 2023, 7:27 PM IST

புதுவையில் பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான சமாதான கூட்டத்தில் சபாநாயகருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.


புதுச்சேரியில் பாரம்பரியமிக்க குபேர் அங்காடி என்று அழைக்கப்படும் பெரிய மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், மளிகை, மீன் அங்காடி என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த பெரிய மார்க்கெட் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 65 கோடி ரூபாய் செலவில் பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடித்து விட்டு புதியதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட்டை முழுமையாக அகற்றிவிட்டு புதிய மார்க்கெட் கட்ட தேவையில்லை. அதே சமயத்தில் இருக்கும் நிலையிலேயே மார்க்கெட்டை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

Latest Videos

சென்னையில் போலீசை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்; லத்தி இருந்தும் ஓட்டம் பிடித்த காவலர்

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் அரசு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. தொடர்ந்து அதிகாரிகளில் சமாதான பேச்சை ஏற்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் உடனான சமாதான கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை கருத்தரங்க அறையில் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பெரிய மார்க்கெட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் சமாதான பேச்சு நடத்திய சபாநாயகர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆகியோர் தற்போது இருக்கும் கடைகளை அகற்றிவிட்டு புதியதாக மார்க்கெட் அமைக்க வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்; மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ஆனால் இதனை ஏற்க மறுத்து மார்க்கெட்டை இருக்கும் நிலையிலேயே புதுப்பித்து கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அடுக்குமாடியில் வணிக வளாகம் தேவையில்லை. தரை தளத்தில் மட்டும் அனைத்து கடைகளும் இயங்கும்படி வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறி சபாநாயகர் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சமாதானப் பேச்சு கூட்டத்தில் பெரும் பரபரப்பு, சலசலப்பு நிலவியது. இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும் பொழுது, புதுச்சேரியில் 3 மாடி வணிக வளாகம் நவீன வசதிகளுடன் பெரிய மார்க்கெட் கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் வரைபடத்தை கூட தங்களிடம் காட்ட வில்லை. எங்களது கோரிக்கை என்னவென்றால் கருவேப்பிலை கொத்து வாங்குவதற்கு மூன்று மாடிக்கு ஏற மாட்டார்கள். 

அது தரைதளத்தில் கிடைக்கும்படி அனைத்து கடைகளும் தரை தளத்தில் இயங்கும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். இது சம்பந்தமாக அடுத்த கூட்டம் குறித்து வியாபாரிகள் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

click me!