
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே லஷ்மி ஏஜென்சி என்ற பெயரில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்க் நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு வந்து பெட்ரோல் மற்றும் டீசல்களை நிரப்பி செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பங்க் ஊழியர் நள்ளிரவு நேரம் என்பதால் சற்று அயர்ந்து தூங்கி உள்ளார். அப்போது பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுற்றும் புற்றும் பார்த்துவிட்டு வாகனத்திற்கு தேவையான 350 ரூபாய் அளவில் பெட்ரோலை நிரப்பி கொண்டு அங்கிருந்து லாவகமாக சென்று விடுகின்றனர்.
காருக்கு வாடகை பாக்கி; தலைமைச் செயலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளால் பரபரப்பு
இதுகுறித்து எந்த விவரமும் தெரியாத பங்க் ஊழியர் காலையில் உரிமையாளரிடம் கணக்கு கொடுக்கும் பொழுது 350 ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு இளைஞர்கள் பங்கிற்கு வந்து தங்களது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலை தானாகவே நிரப்பி சென்றது தெரிய வந்தது.
கடலூரில் 750 ஆண்டு பழமையான சோழர்கால சிவலிங்கத்தை மீட்ட சிவனடியார்கள்
இதனை அடுத்து ஒதியன் சாலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சியில் பதிவாகி உள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் தானாகவே பெட்ரோல் நிரப்பி சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.