புதுவையில் சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம்; போலீசாருடன் தள்ளு முள்ளு

By Velmurugan sFirst Published Mar 9, 2024, 7:01 PM IST
Highlights

புதுச்சேரியில் சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலமாக வந்து சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா போதையில் நடந்த இந்த சம்பவத்தை அரசியல் கட்சிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியின் எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் இளைஞர், மாணவர்களின் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இன்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

ஓட்டு போட்ட மக்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா; 2ஜி வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு - எல்.முருகன்

இதற்காக அண்ணா சிலை அருகே மாணவர்கள், இளைஞர்கள் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி வந்தனர். நேருவீதி, மிஷன்வீதி வழியாக ஜென்மராக்கினி கோவில் எதிரே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இளைஞர்களும், மாணவர்களும்  தடுப்புகளின் மீது ஏறி குதித்து, சட்டசபை நோக்கி முன்னேற்ற முயன்றனர். 

போதைப் பொருளை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒரு அணியை உருவாக்கிய கட்சி திமுக - பாஜக குற்றச்சாட்டு

அப்போது போலீசார் அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தனர்.  இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தையொட்டி ஊர்வலம் வந்த வழிநெடுகிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர்.

click me!