முதல்வர் ரங்கசாமி செய்த பாவத்தின் அறுவடை தான் சிறுமியின் படுகொலை; முன்னாள் எம்எல்ஏ விளாசல்

By Velmurugan s  |  First Published Mar 7, 2024, 6:16 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த பாவத்தின் அறுவடை தான் சிறுமியின் படுகொலை சிறுமியின் உறவினர்களை முதல்வர் இப்போது வரை சந்திக்காதது ஏன் என அதிமுக துணைச்செயலாளர் வையாபுரி மணிகண்டன் கேள்வி எழுப்பி உள்ளார்.


அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி சிறுமி உடல் கிடந்த இடத்தின் அருகே 50 போலீசார் சும்மா நின்றிருந்தனர். ஒரு வேலையும் செய்யவில்லை. எனவே அனைவரையும் கூண்டோடு மாற்றுவதை விட டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்த முதல்வர், அமைச்சர்கள் வரவில்லை என்று குற்றம் சாட்டிய வையாபுரி மணிகண்டன் ஒரு கொலைக்கு 20 லட்சம் கொடுத்தால் போதுமா...? என கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு முதல்வர் பதவி விலக வேண்டும், இந்த அரசை குடியரசு தலைவர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவி கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.

தளபதியின் விலையில்லா வீடு வழங்கும் திட்டம்; முதல் முறையாக 7 வீடுகளை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்

முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் குறிப்பிட்ட காவல் ஆய்வாளர் 3 லட்சம், 5 லட்சம் என துவக்கத்தில் இருந்து பேரம் பேசினார். அவர் தான் பிரேத பரிசோதனை முடித்து உடலை வாங்க பெற்றோரை கட்டாயப்படுத்தினார். அவர் மீது புகார். அம்பேத்கர் நகர் வாய்கால் தான் கஞ்சா கும்பலின் புகழிடமாக உள்ளது.

பழனி கிரிவலப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தான் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். சோலைநகர் போலீசார் 10, 5 ரூபாய் வாங்கி கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விடுகிறார்கள். கஞ்சா வியாபாரிகளுடன் காவல் துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்த வையாபுரி மணிகண்டன், கஞ்சா பணத்தை வைத்து இரண்டாவது வீட்டை காவல் ஆய்வாளர் கட்டியுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

click me!