புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றதை அடுத்து சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதில், ஒரே சிசிடிவி பதிவில் மட்டுமே சிறுமி நடந்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அலட்சியம்.. காவலர்களை கூண்டோடு தூக்கி அடிக்க முதல்வர் உத்தரவு..!
பின்னர் போலீசார் வீடு வீடுடாக சோதனையில் நடத்தினர். இந்நிலையில், மூன்று நாட்கள் கழித்து அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாக கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு நிலைகுலைந்துவிட்டேன்; குற்றவாளிகளுக்கு 1 வாரத்தில் தண்டணை - தமிழிசை
இதனிடையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன. வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலமானது பாப்பம்மாள் கோவில் மயானத்தை அடைந்ததும் சிறுமியின் குடும்ப முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிறுமி பயன்படுத்திய புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.