புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு தேடியும் கிடைக்கவில்லை.
புதுச்சேரி சிறுமி கொலையில் போலீசார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது. தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு நிலைகுலைந்துவிட்டேன்; குற்றவாளிகளுக்கு 1 வாரத்தில் தண்டணை - தமிழிசை
இந்நிலையில், மூன்று நாட்கள் கழித்து அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாக கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு
மேலும் சிறுமியின் உள்ளுறுப்புகளில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு இடமாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.