புதுச்சேரி சிறுமி மிருகத்தனமாக ஈவு இரக்கமின்றிப் படுகொலை: த.வெ.க. தலைவர் விஜய் வேதனை

By SG Balan  |  First Published Mar 6, 2024, 6:32 PM IST

புதுச்சேரியில் 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது  என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.


புதுச்சேரியில் 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது  என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது குறித்து விஜய் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும், "சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக,…

— TVK Vijay (@tvkvijayhq)

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தான் இந்தக் பயங்கரக் குற்றத்தைச் செய்திருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

இதை  அறிந்த பொதுமக்கள் சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் குற்றத்தைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்றும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புதுவையில் சிறுமியை கொலை செய்தவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட வேண்டும் - சீமான் கோரிக்கை

click me!