புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பலரும் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலம், 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடூர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக்கொள்கிறேன்.
நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பறிமுதல்; 15 கூலி தொழிலாளர்கள் கைது
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது. இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும் பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.