சாதிக்க வேண்டும் என்ற வெறியில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அரசுப்பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி

By Velmurugan s  |  First Published Mar 2, 2024, 6:01 PM IST

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே ஓட்டப்பந்தயம் பயிற்சி பெற்ற பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் மறைமலை அடிகள் வீதியைச் சேர்ந்தவர் இளமதி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது 13 வயது மகன் திவாகர். சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்‌. இவருக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்ததாகக் கூறப்படுகிறது‌. 

பிரதமர் பதவிக்கே தகுதியற்றவர் நரேந்திர மோடி - புதுச்சேரி முன்னாள் முதல்வர் காட்டம்

Tap to resize

Latest Videos

இதனால் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல இன்று காலை 6 மணிக்கு தனது தந்தை இளமதியுடன் மோட்டார் சைக்கிள் சென்று சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள டிஐஜி மைதானத்தில் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

மத்திய அரசு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருள் வழங்குகிறது; மாநில அரசு போதை பொருளை விற்கிறது - பாஜக

இந்த நிலையில் பயிற்சி முடித்த திவாகர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகில் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழயிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!