நண்பர்களுடன் ஆற்றில் குளித்த மாணவன்.. நீரில் மூழ்கி பலியான சம்பவம்

By Raghupati R  |  First Published Oct 29, 2022, 9:39 PM IST

புதுச்சேரி அரியாங்குப்பம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்து பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி:

புதுச்சேரி அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி சரவணன் மகன் சிவகுருநாதன் (வயது13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவர் நேற்று மதியம் அவரது நண்பர்கள் 2 பேருடன் வீட்டின் அருகே உள்ள அரிக்கன்மேடு அரியாங்குப்பம் ஆற்றில் குளிக்க சென்றனர். சிவகுருநாதனின் நண்பர்கள் 2 பேரும் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஆற்றில் குளியல்:

சிவகுருநாதன் மட்டும் ஆற்றில் தனியாக குளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெகுநேரமாகியும் சிவகுருநாதன் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சிவகுருநாதன் அரிக்கன்மேடு ஆற்றில் குளித்தபோது மாயமானது தெரியவந்தது.

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

மாணவன் இறப்பு:

உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களுடன் மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிவகுருநாதனை தேடி கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இரவு வெகுநேரமாகிவிட்டதால் மாணவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவனின் உடல் இன்று கரை ஒதுங்கியது.  மாணவனின் உடலை போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

click me!