காரைக்காலில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளானது.
காரைக்காலில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளானது. புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஐயப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். செல்லூர் அருகே பேருந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஓட்டுநர் ஐயப்பனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உடனடியாக என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய அதிமுக..
undefined
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதி அதற்கு பக்கத்தில் பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது. இதில் ஓட்டுனர் ஐயப்பன் மற்றும் நடத்துனர் மகேஸ்வரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: புதுவையில் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு சாலையில் திரிந்த ரவுடியால் பரபரப்பு..!
தகவல் அறிந்து வந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மோதிய கடை பூட்டி இருந்ததோடு அங்கு மக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக திருச்சி பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.