புதுவையில் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு சாலையில் திரிந்த ரவுடியால் பரபரப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 28, 2022, 2:00 PM IST

கஞ்சா சாப்பிட்டிருந்ததால் போதையுடன் நெல்லிதோப்பு மீன் அங்காடி அருகே பரபரப்பான சாலையில் கோபத்துடன் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ரவுடி ரஷி வந்தார். பரபரப்பான சாலையில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சுற்றிய வீடியோ சமூக வளைதளத்தில் தற்போது பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து கொண்டு வீதியில் சுற்றிய ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி சின்ன கொசப்பாளையாத்தை சேர்ந்தவர் ரவுடி ரஷி (23). இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது எதிராளிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரை வழக்கு விசாரணைக்கு நேற்று மாலை உருளையன்பேட்டை போலீசார் அழைத்து சென்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர ரூம் போட்டு உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. கதறும் இளம்பெண்.!

ஆனால் அவர் ஒத்துழைக்காமல் வெளியேறியுள்ளார். கஞ்சா சாப்பிட்டிருந்ததால் போதையுடன் நெல்லிதோப்பு மீன் அங்காடி அருகே பரபரப்பான சாலையில் கோபத்துடன் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ரவுடி ரஷி வந்தார். பரபரப்பான சாலையில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சுற்றிய வீடியோ சமூக வளைதளத்தில் தற்போது பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!

click me!