10,000 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு... புதுவை இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த சபாநாயகர்!!

By Narendran SFirst Published Oct 23, 2022, 10:31 PM IST
Highlights

புதுச்சேரியில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தீபவளி நல்வழ்த்துக்கள். நேற்று பிரதமர் மோடி 10 லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தை துவக்கியுள்ளார். இதில் நேற்று 75 ஆயிரம் பேருக்கு வேலைவாயப்பு ஆணையை வழங்கினார். புதுச்சேரியிலும் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சாதி மத பேதங்களைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் - ஆளுநர் தமிழிசை

இதனால் புதுச்சேரி இளைஞர்கள் பயனடைய உள்ளனர். புதுச்சேரி இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக இது அமைந்துள்ளது. மேலும் ஆயிரத்து 400 கோடி ரூபாயில் முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் புதிய சட்டமன்றம் அமைக்க ஒதுக்கியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு புதுச்சேரி மிளிறும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாணவ மாணவிகள் மகிழ்ச்சி!!

முன்னதாக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ரோஸ்கர் மேளா என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!