சாதி மத பேதங்களைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துவதாக துணைநிலை ஆளுநர் செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீபாவளிப் பண்டிகை, மக்கள் தங்கள் குடும்பத்தோடும் நண்பர்கள்-உறவினர்களோடும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு திருநாள். இந்த திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க:துரோகிகள் ரகசியமாக தான் சந்திப்பார்கள்..! ஓபிஎஸ்சை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்
சாதி மத பேதங்களைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்.
மேலும் படிக்க:துணை வேந்தர் நியமன முறைகேட்டை தடுக்காதது ஏன்..? ஆளுநருக்கும் தொடர்பா.? கே.பாலகிருஷ்ணன் கேள்வி