தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாணவ மாணவிகள் மகிழ்ச்சி!!

By Narendran S  |  First Published Oct 22, 2022, 12:07 AM IST

தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிங்க: புதுச்சேரி ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை.. முதலமைச்சர் ரங்கசாமி சொன்ன அதிரடி பதில்

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்கிழமை வேலை நாள் என்பதால் ஊருக்கு செல்லும் மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை அன்றே பணியாற்றும் இடத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பொருந்தும். இதை அடுத்து பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடும் விதமாக தீபாவளிக்கு மறுநாளான 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை!

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

click me!