
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படியும், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவின்படி, துறை செயலர் அருண் ஆணைப்படி ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் பண்டிகை கால ஊக்கத் தொகையாக ரூபாய் 11,000/- மற்றும் இதர ஊழியர்களுக்கு பண்டிகை கால ஊக்கத் தொகையாக ரூபாய் 5,000/- ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் அமைச்சரவை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.