AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 10:17 AM IST

அஜித் ரசிகர் ஒருவர், விரைவில் வெளியாக உள்ள துணிவு படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதி செல்போனில் படம் எடுத்து அதனை அஜித் ரசிகர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பியுள்ளார். அந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.
 


சமீப காலங்களில் பல்வேறு திரைப்பட நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பல வகையில் வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து, புதிய திரைப்படம் ரிலீஸ் போன்றவற்றுக்கு பல்வேறு வகையில் வரவேற்பு கொடுத்தும், வித்தியாசமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை செல்போனில் படம்பிடித்து பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற whatsapp குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. குரூப் அட்மின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

கட்அவுட்டிற்கு பால் ஊற்றுவது, காவடி எடுப்பது இதுபோன்ற செயல்களை நடிகர் அஜித் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஏற்கனவே தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தையும் நடிகர் அஜித் கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

click me!