புதுச்சேரியில் விரைவில் தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி… தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் தகவல்!!

By Narendran S  |  First Published Oct 18, 2022, 11:45 PM IST

புதுச்சேரியில் முழுமையாக தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


புதுச்சேரியில் முழுமையாக தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் முயற்சியாக புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழுமையான தமிழ் வழி கல்லூரி கொண்டுவர முடியவில்லை என்றாலும் இப்போது இருக்கின்ற கல்லூரியிலேயே தமிழ் வழி பாடம் இருக்கும். விருப்பப்பட்டவர்கள் தமிழில் படிப்பதற்கான புத்தகங்கள் தயாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு  6 மாதத்திற்குள் மருத்துவ கல்வி புத்தகங்கள் தமிழில் தயாரிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: மதுரை ஆதின நிலங்கள் ஒத்திக்கு விடப்பட்ட வழக்கு! - மதுரை ஹைகோர்ட்டு சரிமாரி கேள்வி!

Tap to resize

Latest Videos

undefined

மேலும் மருத்துவக் கல்வியாக இருக்கட்டும் பொறியல் கல்வியாக இருக்கட்டும் தாய் மொழியில் படிக்கும் பொழுது புரிதல் திறன் அதிகமாக இருக்கும். அதில் விற்பன்னர்களாக ஆக முடியும். தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சியும் மருத்துவர் என்ற முறையில் செய்வேன் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து பால் தட்டுப்பாடு குறித்து பேசிய தமிழிசை, நாள் ஒன்றுக்கு புதுச்சேரிக்கு 10,5000 லிட்டர்  தேவைப்படுகிறது. அதில் 25 ஆயிரம் லிட்டர் குறைவாக கிடைத்திருக்கிறது. பால் கொள்முதல் கர்நாடகாவில் இருந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

கர்நாடகாவில் அதிக மழை காரணமாகவும் பண்டிகை காலம் காரணமாகவும் 25 ஆயிரம் லிட்டர் இரண்டு நாட்கள் குறைவாக கிடைத்திருக்கிறது. அதை உடனே சரி செய்வதற்கு கர்நாடக அரசிடம் பேசி இருக்கிறார்கள். முதலமைச்சரும் செயலரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உடனடியாக 25 ஆயிரம் தர முடியவில்லை என்றாலும் 10,000 லிட்டர் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மூன்று தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3 தனியார் நிறுவனங்களிடமிருந்தும் 5000 வந்தால் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்று தெரிவித்தார்.  

click me!