புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடற்கரையில் இறங்கிய 4 மாணவர்கள் சலடமாக மீட்பு

By Velmurugan s  |  First Published Jan 2, 2024, 4:41 PM IST

புத்தாண்டு கொண்டாட கடற்கரைக்கு வந்தபோது கடலில் குளித்து மயாமான 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நேற்று முந்தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர். கடலில் இறங்கி குளிக்கக்கூடாது என போலீசார் எச்சரித்து தடுப்பு கட்டைகளை அமைத்திருந்தனர். இதையும் மீறி ஆர்வம் மிகுதியால் ஏராளமானவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். 

இரவு விடுதியில் குத்தாட்டம் போட்டு புத்தாண்டை வரவேற்ற அமைச்சர் ரோஜா

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் பழைய துறைமுக கடலில் நேற்று முந்தினம் மாலை கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த நெல்லித்தோப்பு டி.ஆர்.நகரைச் சேர்ந்த சீனிவாசன் - மீனாட்சி தம்பதியினரின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகள்கள் மோகனா (வயது 16), லேகா (14) ஆகிய இருவரும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பயிலும் நவீன் (16) மற்றும் அவரது நண்பர் கிஷோர் (16) ஆகிய நான்கு மாணவர்களை ராட்ச அலை இழுத்துச் சென்றது. 

திருச்சியில் மொத்தமாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை; 2 சிறுமிகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலி

இதனைத்தொடர்ந்து நான்கு மாணவர்களையும் கடலோராக்காவல் படை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று மோகனா, லேகா மற்றும் கிஷோர் ஆகிய மூன்று மாணவர்களின் உடல்கள் வீராம்பட்டினம் கடல் பகுதியில் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்து மூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடலில் மாயமான மற்றொரு மாணவன் நவீனின் உடல் இன்று கரை ஒதுங்கியது.

click me!