Pongal 2024: பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000! வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும் தெரியுமா?

Published : Dec 31, 2023, 12:03 PM ISTUpdated : Dec 31, 2023, 12:04 PM IST
Pongal 2024: பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000! வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும் தெரியுமா?

சுருக்கம்

சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1000 தொகை செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1000 தொகை செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்;- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது. மேலும் புதுச்சேரி பிராந்தியத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்பு கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்கான உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி
விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!