தூத்துக்குடிக்கு நான் சென்றது ஆய்வுக்காக அல்ல, ஆறுதல் சொல்ல - தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

By Velmurugan s  |  First Published Dec 27, 2023, 11:29 AM IST

தூத்துக்குடிக்கு நான் சென்றது ஆய்வுக்காக அல்ல, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்ல தான் சென்றேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


பாரதப் பிரதமர் திட்டமான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல். நிகழ்ச்சி புதுச்சேரி வில்லியனூர், கோட்டைமேடு, விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மற்றும் உழவர்கரை, வின்சென்ட் வீதி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திட்டப் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை, தூத்துக்குடியில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு மக்கள் வெளிப்படுத்திய கருத்தைதான் நான் கூறினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. 3 கிராமங்களுக்கு மட்டுமே செல்வதாக இருந்தேன். ஆனால் அங்க சென்ற பிறகு 15 கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்திருக்கலாம் என மக்களின் குரலாக நான் கூறியுள்ளேன்.

Tap to resize

Latest Videos

undefined

திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆருத்ரா மகா அபிஷேகம்

என்னுடைய சொந்த ஊர். அங்கு நான் தேர்தலில் நின்று இருக்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக சென்றேன். தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் அங்கு செல்லவில்லை. நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அங்கு செல்லவில்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழக சபாநாயகர் அப்பாவு, அங்கு சென்று ஆய்வு செய்வதற்கு இவர்கள் யார் என கேள்வி எழுப்புகின்றனர். நான் அங்கு ஆய்வு செய்ய செல்லவில்லை. எனது சகோதர, சகோதரிகளின் துன்பத்தில் பங்கு பெறுவதற்காக சென்றேன். ஆய்வுக்காக செல்லவில்லை என்பதை அப்பாவும் புரிந்து கொள்ள வேண்டும். செய்தியாளர்கள் ஆர்வத்தில் ஆய்வுக்கு சென்றதாக எழுதிர்க்கலாம். நான் ஆய்வு செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு நான் இல்லை. அது கூட தெரியாமல் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருக்க முடியுமா? அரசு மீது குற்றம் சொல்வதற்கு எனக்கு எண்ணம் இல்லை. தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக நான் தெளிவாக சொல்கிறேன்.

சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்

தற்போது வரை எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து வருகிறேன். எனது சகோதர, சகோதரிகள் ஒரு இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்றதை கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதை திமுகவிற்கு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

click me!