போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என்று கண்டித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மோடி அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருக்கிறது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இதற்காக பிரதமர் வெட்கி தலை குனிய வேண்டும்.
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாராளுமன்ற வரலாற்றிலேயே இது போன்று நடந்தது இல்லை. இது ஜனநாயக படுகொலை, குரல்வளையை நெரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டிய அவர் எம்பிக்களை வெளியேற்றிவிட்டு சபை நடத்துவது என்பது மோடியின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது.
undefined
புதுவை மத்திய சிறை கல்வி சாலையாக காட்சி அளிக்கிறது - நடிகர் பார்த்திபன் பாராட்டு
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை அரசுடன் மத்திய அரசு அமர்ந்து பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் 380 கோடி ரூபாயில் பொருத்தப்பட உள்ள ப்ரீப்பெய்டு மின்மீட்டர் திட்டத்தில் 30 சதவீதம் ஆட்சியாளர்கள் கமிஷன் பெற்றுள்ளனர். மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ப்ரீப்பெய்டு மின்மீட்டர் திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மத்திய அரசு ஏன் துடிக்கிறது? ரங்கசாமி பலவீனமாக உள்ளாரா? மத்திய அரசை ஏன் அவர் எதிர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் மாணவர்களுக்கு முட்டை கொள்முதல் செய்ததில் ஊழல், மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல், இந்த ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி உடைந்து விடும் என்று எல்.முருகன் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. முதலில் அவர்களை தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் வெல்ல சொல்லுங்கள். தமிழ்நாட்டிலே குப்பை கொட்ட முடியாத எல்.முருகன் அகில இந்திய அரசியல் பேசுகிறாரா என்றார்.