மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் ஓ.பி.எஸ் தலைமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ

By Velmurugan s  |  First Published Dec 5, 2023, 4:59 PM IST

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஒற்றை கருத்துடன் ஓபிஎஸ் தலைமையில், ஓரணியில்  ஒன்று திரள வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.


புதுச்சேரி அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி நெல்லித்தோப்பு அதிமுக அலுவலகத்தில் இருந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக வந்து 100 அடி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர், ஜெயலலிதாவின் கொள்கைகள், கோட்பாடுகள், ஆசைகளை, மதிப்பவராக இருந்தால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவருடைய நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை அடைவது என்பது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். இது எடப்பாடியின் சந்தர்ப்பவாத அரசியல். எங்களுக்கு ஒரே நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்றார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியை நான்கு பிரிவாக ஆக்கிவிட்டதாக குற்றம் சாட்டிய ஓம் சக்தி சேகர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றால் அனைவரும் ஒத்த கருத்துடன் ஓர் அணியில் ஒன்று திரள வேண்டும். கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

click me!