புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதல் ஏற்படுவதாகக் கூறி சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியரின் காரை மடக்கி பிடித்த சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் கூலித் தொழிலாளி கோவிந்தன்(வயது 58) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான இவருக்கு காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் கடந்த 19ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து கோரிமேடு பகுதியில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
undefined
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி கோவிந்தன் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க கூறினர். ஆனால் அதிகாரிகள் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனையடுத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி பேசியபோது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அனைவரையும் சமமாக மதித்த அற்புதமான மனிதர் விஜயகாந்த் - அன்புமணி புகழஞ்சலி
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட ஆட்சியர் வல்லவன் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் நேரு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரும் போஃனை எடுக்கவில்லை இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்து ஆட்சியரின் கார் சென்றதை கண்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு காரை துரத்தி சென்று சிக்னலில் காரை மறித்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால் அங்கிருந்து ஆட்சியர் நகர முடியாத நிலையில் காரை விட்டு இறங்கினார். மேலும் அவரிடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொரோனாவில் உயிரிழந்த கோவிந்தனின் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகையிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கலைந்து சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுச் சென்றார்.
உடலை அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியரை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.