யார் இந்த எஸ் பி வேலுமணி? ஏக்நாத் ஷிண்டே என்று கூறப்பட்ட நிலையில் X தளத்தில் பரபரப்பு பதிவு!

By SG Balan  |  First Published Sep 30, 2023, 2:34 PM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். கடந்த சில நாட்களாக தன்னைப் பற்றி எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இரண்டே வார்த்தைகளில் ஒரு ட்வீட் போட்டு பதில் கூறியிருக்கிறார்.


1969ஆம் ஆண்டு கோவை மாவட்டம் குனியமுத்துார் சுகுணாபுரத்தில் எஸ்.பி.வேலுமணி மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் பழனிசாமி – மயிலாத்தாள். அரசியலுக்கு எல்லாம் வருவதற்கு முன் சினிமாவில் நடிக்கும் கனவுடன் வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்து திரிந்திருக்கிறார். ஆனால், திரைத்துறை அவரை வரவேற்கவில்லை.

விரக்தியில் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கோவை திரும்பினார். பிறகு அவரது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. இந்தப் பாதை அவரை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராஜூவிடம் அரசியலில் ஆரம்பப் கல்வியைப் பெற்றிருக்கிறார்.

Latest Videos

undefined

பிறகு, ஒருமுறை கோவை வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வித்தியாசமான வரவேற்பு கொடுத்தார். வெள்ளை நிற பேண்ட், ஜெயலலிதா உருவம் பொறித்த பனியன் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன் அமோக வரவேற்பு கொடுத்து ஜெயலலிதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

28 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஏசியாநெட் நியூஸ்! 1995 முதல் கடந்து வந்த வெற்றிப் பாதை!

வேலுமணியின் ஆர்வத்தைக் கண்டுகொண்டார். அவருக்கு ஏற்ற கட்சி்ப் பொறுப்புகளை வழங்கினார். 2001ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குனியமுத்தூர் நகராட்சித் தலைவரானர். 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பேரூர் தொகுதியில் கே.பி.ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின், அவருக்குப் பதில் வேலுமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான எஸ்.பி.வேலுமணி. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2011ஆம் ஆண்டு சில மாதங்கள் மட்டும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறைக்கு அமைச்சராக இருந்தார்.

சசிகலாவின் உறவினர் ராவணனின் தீவிர விசுவாசி என்ற அடையாளமும் எஸ்.பி.வேலுமணிக்கு உண்டு. அதனால்தான் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் 2014ஆம் ஆண்டு அதே சசிகலா குடும்பத்தின் செல்வாக்கை வைத்தே மீண்டும் அமைச்சர் பதவியை தன்வசப்படுத்தினார். இந்த முறை உள்ளாட்சித்துறை போன்ற முக்கிய இலாகாவும் இவருக்கு ஒதுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டிலும் அமைச்சர் பதவி நழுவிவிடாமல் பார்த்துக்கொண்டார்.

தொடர் வைப்புநிதி சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு: நிதி அமைச்சகம் அறிவிப்பு

இதன் மூலம் மூத்த தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி கட்சியிலும் ஆட்சியிலும் வலுவான நபராக மாறினார் எஸ்.பி.வேலுமணி. ஜெயலலிதா மரணத்திற்குப் பின், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் வேலுமணி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டி எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமை ஆக்கியதிலும் முக்கியப் பங்காற்றினார்.

இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகை போல செயல்பட்டு வரும் இவர் பாஜகவுக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் 21 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.

கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்திக்க, கோவை மாவட்டத்தை அதிமுக கூட்டணியின்  கோட்டை என்று நிரூபித்தார். பொறுப்பு வகித்த 21 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்தார். பின், அதிமுக சட்டப்பேரவை கொறடா பதவியைப் பிடித்ததன் மூலம், அதிமுகவில் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

வெளிநாடுகளில் கைதாகும் பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்!

கட்சியிலும் அரசியலிலும் அசுர வளர்ச்சி கண்டிருந்தாலும் உள்ளாட்சி டெண்டர்கள் முறைகேடு அவரை சர்ச்சையில் மாட்டிவிட்டது. தனக்கு நெருக்கமான நபர்களுக்கு ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் என்று புகார் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

pic.twitter.com/CiJDEl9kpy

— SP Velumani (@SPVelumanicbe)

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் வேலுமணியின் ஊழல் வழக்குகள் கிடப்பில் போட்டப்பட்டுள்ளன என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது பாஜக - அதிமுக கூட்டணி முறிந்துள்ளதால், வேலுமணிக்கு ரெய்டு நெருக்கடி வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், வேலுமணி மீண்டும் பாஜகவுக்கு கூட்டணிக் கதவைத் திறக்க கட்சியில் ஆதரவு திரட்ட முயற்சி செய்வார் என்றும், முடியாவிட்டால் பாஜகவில் ஐக்கியமாகிவிடுவார் என்றும் சில நாட்களாக பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

இதற்கு பதில் கூறும் வகையில் இன்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.பி.வேலுமணி, என்றென்றும் அதிமுககாரன் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் பல வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவை வரவேற்க வெள்ளைச் சட்டை அணியுடன் சைக்கிளில் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளுடன் தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! அதிர்ச்சியில் உயிரை விட்ட தந்தை!

click me!